துறையின் தொலை நோக்கு
தனிமனித வாழ்வு, ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம் என மனித வாழ்வின் இலக்கினை இயம்பும் தமிழ் இலக்கியத்தினை கற்று, தங்கள் சிந்தனையைப் பரிமாற்றம் செய்து, பல்வேறு துறைகளிலும் மேம்பட்ட வளர்ச்சியைப் பெற்று, நாகரிக முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டியாக அமையும் எம் தமிழ்த்துறை, எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் இளம் சமுதாயத்திற்கு அளிப்பதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளது.
துறையின் நோக்கம்
மாணவியர் தமிழ்மொழியின் கலை மற்றும் இலக்கண இலக்கிய அறிவை வளர்த்துக்கொள்ளுதல் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குதல் ஊடகத்துறையிலும் தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளிலும் மாணவியர் வெற்றிபெற்று வேலைவாய்ப்பினைப்பெற்று சமுதாயத்தில் நன்மதிப்புடன் வாழச்செய்தல் என்பதே தமிழ்த்துறையின் நோக்கமாகும்.
பல்கலைக்கழக அங்கீகாரம்
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 2006 – 2007 ஆம் கல்வி ஆண்டு முதல் பகுதி 1 தமிழ் பயிற்றுவித்து வந்த தமிழ்த்துறை 2014-2015 ஆம் கல்வியாண்டில் தமிழுடன் கணினி பயன்பாட்டை 62 மாணவிகளுடன் பயின்று இளங்கலை பட்டம் பெறும் தமிழ்த்துறையாக வளர்ந்தது. இன்றைய நாள் வரை இரண்டு குழுக்கள் இத்துறையில் பட்டம் பெற்று சிறப்படைந்துள்ளனர். மேலும் இத்துறை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிமுறை மாற்றத்தை ஏற்று தமிழ் இலக்கியங்களை மட்டும் பயிற்றுவிக்கும் துறையாக அங்கீகாரம் பெற்று வளமோடு வளர்ந்துள்ளது
பேராசிரியைகள்
Dr. Mrs. R. Aruna Jothi, M.A., M.Phil., Ph.D. | Head of the Department |
Dr. Mrs. S. Angel Latha , M.A., M.Phil., SET., Ph.D. | Asst Professor |
Dr. Miss. S. Sathiya Bama, M.A., M.Phil., Ph.D. | Asst Professor |
Miss. A. Kalpana Devi, M.A., M.Phil., B.Ed., SET., NET | Asst Professor |
Miss. K. Helan, M.A., M.Phil., B.Ed., SET., HDCA | Asst Professor |
Dr. Mrs. M. Christy Mercy, M.A., M.Ed., M.Phil., Ph.D | Asst Professor |
Dr. Mrs. P. Mari Thangam, M.A., M.Phil., B.Ed., SET., Ph.D | Asst Professor |
Miss. C. Muthu Kumari, M.A., M.Phil., B.Ed. | Asst Professor |
Mrs. B. Shiny, M.A., M.Phil., SET., NET. | Asst Professor |
Mrs. V. Selvi, M.A., M.Phil., B.Ed., SET | Asst Professor |
Mrs. G. Jeyalakshmi, M.A., M.Phil., NET | Asst Professor |
ஆசிரியர் செயல்பாடுகள்
வ. எண் | தேதி | கருத்தரங்கம் / பயிலரங்கம் | பங்கேற்கும் பேராசிரியர் பெயர் | பங்கேற்பு / கட்டுரை வழங்கல் | நிகழ்விடம் |
---|---|---|---|---|---|
1. | 22.07.2017 | பன்னாட்டு கருத்தரங்கம் | அ. கல்பனா தேவி உதவிப்பேராசிரியர் | பாரதியார் கவிதைகளில் அறம் | ஓளவை அறக்கட்டளை தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு |
2. | 22.02.2017 | பன்னாட்டு கருத்தரங்கம் | க. ஹெலன் உதவிப்பேராசிரியர் | பாரதியார் கவிதைகளில் வாழ்வியல் கூறுகள் | ஓளவை அறக்கட்டளை தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு |
3. | 08.12.2017 | கல்லூரி கருத்தரங்கம் | அ. கல்பனா தேவி உதவிப்பேராசிரியர் | பழந்தமிழர் வாழ்வியல் நெறிகள் | நாசரேத் மர்காசியஸ் கல்லூரி பிள்ளையன்மனை |
4. | 18.12.2017 | கல்லூரி கருத்தரங்கம் | மை. கிறிஸ்டி மெர்சி உதவிப்பேராசிரியர் | காலத்தை வென்ற கவிதை குரல்கள் | நாசரேத் மர்காசியஸ் கல்லூரி பிள்ளையன்மனை |
5. | 19.12.2017 | தேசியக் கருத்தரங்கம் | பெ. ஷைனி உதவிப்பேராசிரியர் | தமிழ் இனி – எதிர்காலத்தமிழ் | சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பாளையங்கோட்டை |
6. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | இரா. அருணா ஜோதி உதவிப்பேராசிரியர் | முத்துக்குளித்தல் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
7. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | சு. ஏஞ்சல் லதா உதவிப்பேராசிரியர் | பெரும்பாணாற்றுப்படை உணர்த்தும் கடல்சார் பதிவுகள் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
8. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | ச. சத்திய பாமா உதவிப்பேராசிரியர் | வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் கடல்சார் பதிவுகள் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
9. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | அ. கல்பனா தேவி உதவிப்பேராசிரியர் | வாஸந்தியின் நிற்க நிழல் வேண்டும் புதினத்தில் கடல்சார் பதிவுகள் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
10. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | க. ஹெலன் உதவிப்பேராசிரியர் | புறநானூற்றில் கடல்சார் பதிவுகள் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி மாநில அளவிலான கருத்தரங்கம் காயல்பட்டணம் |
11. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | மை. கிறிஸ்டி மெர்சி உதவிப்பேராசிரியர் | அகநானூற்றில் கடல்சார் பதிவுகள் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
12. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | சு. மாரித்தங்கம் உதவிப்பேராசிரியர் | கடல்சார் நம்பிக்கைகள் (காதல் யுத்தம் - இந்திரா சௌந்தரராஜன்) | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
13. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | செ. முத்துக்குமாரி உதவிப்பேராசிரியர் | குறுந்தொகையில் கடல்சார் பதிவுகள் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
14. | 20.12.2017 | மாநில அளவிலான கருத்தரங்கம் | பெ. ஷைனி உதவிப்பேராசிரியர் | ஐங்குறுநூறும் நெய்தல் நிலம் சார் கட்டமைவுச் சுழலியலும் | வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றம் அறிவியல் கல்லூரி காயல்பட்டணம் |
15 | 14.02.2018 | தேசியக் கருத்தரங்கம் | இரா. அருணா ஜோதி உதவிப்பேராசிரியர் | தமிழ் இலக்கியங்களில் தகவல் தொடர்புக் கூறுகள் | ஆதித்தனார் கல்லூரி திருச்செந்தூர் |
16. | 14.02.2018 | தேசியக் கருத்தரங்கம் | சு. ஏஞ்சல் லதா உதவிப்பேராசிரியர் | இலக்கியங்களில் வேளாண்சார் தகவல் தொடர்புக் கூறுகள் | ஆதித்தனார் கல்லூரி திருச்செந்தூர் |
17. | 14.02.2018 | தேசியக் கருத்தரங்கம் | பெ. ஷைனி உதவிப்பேராசிரியர் | சிலப்பதிகாரத்தில் தகவலியல் கருவிகளும் நுட்பங்களும் | ஆதித்தனார் கல்லூரி திருச்செந்தூர் |
பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற மாணவியர்
மொழிப்பாடம் (பகுதி 1 தமிழ்)
கல்வியாண்டு | மாணவி பெயர் | தரவரிசை |
---|---|---|
2007-2010 | கலிமா நிலோஃபர் பானு (கணிதவியல்) | 19 |
2008-2011 | மொஹமது மொகுதும் ஜென்னா (கணிதவியல்) | 20 |
2009-2012 | டி. தேன்மொழி (ஆங்கில இலக்கியம்) | 18 |
2010-2013 | சி. நித்யா( ஆங்கில இலக்கியம்) | 9 |
எஸ் யாஸ்மின் பாத்திமா (கணிதவியல்) | 16 | |
எம். ஹேமா பிருந்தா (கணிதவியல்) | 19 | |
2013-2016 | தி.முத்து என்ற சத்திய பிரியா (கணிதவியல்) | 7 |
வி. ராதா (கணிதவியல்) | 11 | |
எஸ். முத்து பிரியங்கா (கணிதவியல்) | ||
ர.அகிலா(கணிதவியல்) | 17 | |
2014-2017 | ஜே. மேகலா(கணிதவியல்) | 20 |
இ. பொன் சித்ரா(கணிதவியல்) | 20 |
துறை முதன்மைப் பாடம்
கல்வியாண்டு | மாணவி பெயர் | தரவரிசை |
---|---|---|
2014-2017 | ம. சுமதி | 1 |
வி. சண்முக சுந்தரி | 2 | |
ஜி. சாரதா | 3 | |
ம. மகராசி | 4 | |
கமலா நந்தினி | 5 | |
2015–2018 | ளு. நஸ்ரின் பாத்திமா | 1 |
மு.ஆரோக்கிய நந்தினி | 2 | |
சு. நந்தினி | 3 | |
து.பாத்திமா நிரோஸா | 4 | |
பு.உமா மகே~;வரி | 5 |
கருத்தரங்கம்
இலக்கியங்களை ஆய்வு நோக்கோடு அணுகி இலக்கியத்தின் உட்பொருளை அறிந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கும் வழி காட்டும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறுதுறை சார்ந்த கருத்தாளர்களை அழைத்து கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது.
வ.எண் | நாள் | நிகழ்வு | கருத்தாளர் |
---|---|---|---|
1. | 23.02.2013 | ஒருநாள் கருத்தரங்கம் “தமிழ்த்தேடல்” | முனைவர் ச.மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. திரு.நா.மம்முது கண்காணிப்பாளர் (பணி நிறைவு) நெடுஞ்சாலைத்துறை. முனைவர்.அப்துல் சமது தமிழ்த்துறை, கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். |
2. | 7,8,9.01.2015 | மூன்று நாள் செம்மொழிக் கருத்தரங்கம் “சங்க இலக்கியத்தில் தொழில்கள்” | முனைவர்.வி.மருதநாயகம், மோழிபெயர்ப்புத்துறைத் தலைவர் மற்றும் ஆய்வறிஞர், சேம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. பேரா.இ.சுந்தரமூர்த்தி, மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர். முனைவர்.ஞா.ஸ்டீபன் தமிழியற்துலத் தலைவர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி. |
3. | 20.12.2017 | கருத்தரங்கம் “இலக்கியங்களில் கடல்சார் பதிவுகள்” | முனைவர் ஆதித்தன் தகைசால் பேராசிரியர், மொழியியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. முனைவர். வறீதையா கான்ஸ்டன்டைன், விலங்கியல்துறைப் பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர், புனித யூதா கல்லூரி, தூத்தூர், கன்னியாகுமரி மாவட்டம். |
வஜீஹாவின் வண்ணக் கலைவிழா
மாணவியரின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில்; இலக்கியங்களை மையமாகக் கொண்டு மாநில அளவில் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
வஜீஹாவின் வண்ணக் கலைவிழா – 2017
தைத் திங்கள் 5 ஆம் நாள் (19.01.2017) அன்று வஜீஹாவின் வண்ணக் கலைவிழா போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நம் கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு .ள. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார். இப்போட்டியில் பிற கல்லூரிகளைச் சார்ந்த மாணவியர் 70 பேர் கலந்து கொண்டனர். 5 கல்லூரிகள் பங்கேற்றன. அந்த இரு நிமிடம், இலக்கிய மாந்தரைக் காட்சிப்படுத்துதல்;, பாவனைப்போட்டி நாட்டுப்புற நடனம், வினாடிவினா போன்ற போட்டிகள் நடத்தப்பெற்றன.
அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்த திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரிக்கு சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றனர்.
வஜீஹாவின் வண்ணக் கலைவிழா – 2018
தைத் திங்கள் 17 ஆம் நாள் (31.01.2019) அன்று வஜீஹாவின் வண்ணக் கலைவிழா போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நம் கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு ளு. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார். இப்போட்டியில் பிற கல்லூரிகளைச் சார்ந்த மாணவியர் 106 பேர் கலந்து கொண்டனர். 8 கல்லூரிகள் பங்கேற்றன. அந்த இரு நிமிடம், பாவனைப் பேட்டி, இலக்கிய மாந்தரைக் காட்சிப்படுத்துதல், தத்துவப்பாடல், இருவர் நடனம், நாட்டுப்புற நடனம், வினாடிவினா போன்ற போட்டிகள் நடத்தப்பெற்றன.
அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்த தூத்துக்குடி, திருச்சிலுவை மனையியல் கல்லூரிக்கு சுழற்கோப்பையும், ஊக்கத்தொகையும் பரிசாக வழங்கப்பட்டது.


